அரசியலும் கிரிக்கெட்டும் ஒன்றுதான்: மகாராஷ்டிரா நிலவரம் குறித்து நிதின்கட்காரி

Webdunia
வியாழன், 14 நவம்பர் 2019 (21:39 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக, சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகிய மூன்று கட்சிகளுக்கும் ஆட்சி அமைக்க ஆளுநர் வாய்ப்பு கொடுத்த நிலையில், மூன்று கட்சிகளும் ஆட்சி அமைக்க தவறியதையடுத்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் அரசியல் கட்சிகள் தங்கள் மெஜாரிட்டியை நிரூபிக்கும் வகையில் வந்தால் அவர்களுக்கு அரசு அமைக்க வாய்ப்பு வழங்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது 
 
இதனை அடுத்து சிவசேனா மீண்டும் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அனேகமாக இன்னும் ஒரு சில நாட்களில் அங்கு சிவசேனா தலைமையிலான ஆட்சி அமைய வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இன்னொரு பக்கம் பாஜகவும் சிவசேனா கட்சியை உடைத்து ஆட்சி அமைக்க முயற்சிப்பதாக ஒரு வதந்தி பரவி வருகிறது 
 
இந்த நிலையில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அவர்கள் செய்தியாளர்களிடம் பேசியபோது: அரசியலிலும், கிரிக்கெட்டிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம், சில நேரம் தோற்பது போன்று இருந்தாலும், முடிவு தலைகீழாக மாறும் என மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் குறித்து கூறியுள்ளார்.
 
அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பது போல் நிதின் கட்காரி கூறியிருப்பதால் பாஜக ஆட்சி அமைக்க மறைமுகமாக முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்