ரஜினியுடன் உடன்படும் கமல்: ஏன் இந்த திடீர் ஒற்றுமை?

வியாழன், 14 நவம்பர் 2019 (20:07 IST)
தமிழகத்தில் தற்போது வெற்றிடம் என்பது உள்ளது என நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 
 
கமல்ஹாசன் சமீப காலமாக கள அரசியலில் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். நீட், காஷ்மீர் பிரச்சனை, ஹிந்தி திணிப்பு, ஆகியவற்றை குறித்து ஆளும் அரசை விமர்சித்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
 
இந்நிலையில் தற்போது கமலின் அரசியல் நுழைவு குறித்து செய்தியாளர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டபோது, கமல்ஹாசனுக்கு அரசியல் பற்றி என்ன தெரியும்? தொண்டர்களாவது தனடு படத்தை பார்க்கட்டும் என்று தான் நடித்துக்கொண்டிருக்கிறார் என பதிலளித்தார். 
இது குறித்து கமல்ஹாசனிடம் கேட்கப்பட்ட போது, முதல்வர் பழனிசாமி என்னை பற்றி பேசியது அவரது கருத்து. தமிழகத்தில் தற்போது வெற்றிடம் என்பது உள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடலாமா என்பது குறித்து ஆலோசனை செய்து கொண்டிருக்கிறோம் என தெரிவித்துள்ளார். 
 
வெற்றிடம் உள்ளது எனும் ரஜினியின் கருத்தை கமல் ஏற்றுக்கொண்டிருப்பதால், நீங்கள் துணிந்து களத்தில் இறங்குங்கள், உங்கள் பின்னால் நான் இருக்கிறேன், இணைந்து பணி செய்வோம் என்று இருவரும் டீம் போட்டு மறைமுகமாக அரசியல் பணிகளை செய்வதாகவும் கூறப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்