டெல்லி நியூஸ் க்ளிக் அலுவலகத்துக்கு சீல்.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக வழக்கு..!

Webdunia
செவ்வாய், 3 அக்டோபர் 2023 (17:42 IST)
டெல்லியில் இன்று காலை முதல் நியூஸ் க்ளிக் என்ற பத்திரிகை அலுவலகம் மற்றும் அந்த பத்திரிகையில் பணிபுரியும் பத்திரிகையாளர்களின் வீடுகளில் டெல்லி சிறப்பு போலீசார் சோதனை செய்த நிலையில் தற்போது நியூஸ் கிளிக் பத்திரிகை அலுவலகம் சீல் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  
 
இணையதள செய்தி நிறுவனமான நியூஸ் க்ளிக் அலுவலகத்திற்கு சீல் வைத்த டெல்லி சிறப்பு காவல்துறை இந்நிறுவனம் சட்டவிரோத செயல்கள் செயல்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
 
 இதனை அடுத்து தடுப்புச் சட்டத்தின் நியூஸ் க்ளிக் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  
 
இந்த நிலையில் பத்திரிகையாளர்களின் குரலை நசுக்குவதாக மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்