ஷவர்மா சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு

திங்கள், 18 செப்டம்பர் 2023 (13:31 IST)
நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள ஐவின்ஸ் என்ற உணவகம் இயங்கி வந்தது. இந்த உணவகத்தில் சாப்பிட்ட கலையரசி என்ற சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதே உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்ட மேலும் 13 மாணவர்கள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தை அடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தவின் பேரில் உணவகத்திற்குச் சீல் வைக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்