ஊரடங்கை மீறி கூட்டம் கூட்டிய பாஜக தலைவர்: போலீஸார் வழக்குப்பதிவு

Webdunia
செவ்வாய், 31 மார்ச் 2020 (09:50 IST)
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், உத்தரவை மீறி மக்களை கூட்டியதற்காக புதுச்சேரி பாஜக தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் கூட்டங்கள் நடத்தவோ, மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க ஒன்றாக கூடுவதோ கூட தடை செய்யப்பட்டுள்ளது. பொருட்கல் வாங்க செல்லும் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன் மக்களுக்கு இலவச அரிசி தருவதாக அறிவித்ததன் பேரில், அதை வாங்க புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியில் மக்கள் கூட்டம் அலை மோதியுள்ளது. ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் இவ்வாறாக மக்கள் கூடியதும் போலீஸார் உடனடியாக விரைந்து மக்கள் கூட்டத்தை கலைத்தனர். அனுமதியின்றி மக்கள் கூட்டத்தை கூட்டியதாக புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் மீது போலீஸார் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்