ஊரடங்கை மீறி குவிந்த 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் – விரட்டியடித்த போலீஸார்!

சனி, 28 மார்ச் 2020 (13:51 IST)
தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கோயம்புத்தூரில் வடமாநில தொழிலாளர்கள் பலர் சாலைகளில் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து மாவட்ட எல்லைகள் மூடப்பட்டு தீவிர காவல் கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அவசியமின்றி சாலைகளில் சுற்றி திரிவோர் மீது போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கோயம்புத்தூரில் வேலைக்காக வந்து தங்கியுள்ள வட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளிகள் போராட்டம் நடத்த முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வட மாநிலங்களிலிருந்து கோயம்புத்தூர், திருப்பூர் தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு வந்துள்ள மக்கள் தற்போது ஊரடங்கு உத்தரவால் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்ப முடியாத நிலை உள்ளது. தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் உணவு, தங்குமிடம் உள்ளிட்டவற்றிற்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக கூறி அவர்கள் கோவை சுந்தராபுரம் பகுதி அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உடனடியாக அங்கு விரைந்த போலீஸார் சாலை மறியலில் ஈடுபட்டிருந்த 100க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்களை தடியடி நடத்தி கலைத்தனர். இந்த சம்பவம் கோவை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்