பிரதமரின் டுவிட்டர் கணக்கு ஹேக்: ஹேக்கர்களின் டுவிட் என்ன தெரியுமா?

Webdunia
ஞாயிறு, 12 டிசம்பர் 2021 (08:00 IST)
பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு அதில் பதிவு செய்த ஒரு டுவிட்டால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
பிரதமர் மோடியின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கை நேற்று ஹேக்கர்களால் திடீரென ஹேக் செய்யப்பட்டது. அதில் இந்தியா பிட்காயினை அங்கீகரித்து விட்டது என்பதும் இந்தியா 500 பிட்காயினை வாங்கி உள்ளது என்றும் பதிவு செய்யப்பட்டு இருந்தது
 
இது குறித்து தகவல் தெரிந்ததும் உடனடியாக அந்த டுவிட் டெலிட் செய்யப்பட்டது என்பதும் இது குறித்து டுவிட்டர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்தியாவிற்கான அங்கீகரித்து விட்டது என பிரதமரின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்து ஹேக்கர்கள் பதிவு செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது இந்த ட்விட்டை நம்பவேண்டாம் என்றும் அது போலியானது என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது
 
ஒரு நாட்டின் பிரதமரின் டுவிட்டர் கணக்கை பாதுகாப்பு இல்லையா? என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்