பிபின் ராவத் மறைவு: மோடி, ராஜ்நாத் சிங் இரங்கல்!

புதன், 8 டிசம்பர் 2021 (18:46 IST)
இந்தியாவின் முப்படை தளபதி பிபின் ராவத் அவர்கள் மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரது மறைவிற்கு பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவர்கள் தங்கள் இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
 
பிரதமர் மோடி: பிபின் ராவத் அவர்கள் ஒரு சிறந்த வீரராக இருந்தவர் என்றும் உண்மையான தேசப்பற்றாளர் என்றும் ஆயுதப் படைகளை நவீன படுத்துவதில் சிறந்த பங்காற்றியவர் என்றும் அவரது மரணம் என்னை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் முப்படைகளின் முதல் தலைமை தளபதியாக பாதுகாப்பு அம்சங்கள் உள்பட பல்வேறு அம்சங்களில் சிறப்பாக பணியாற்றியவர் என்றும் அவரது சேவையை இந்தியா என்றும் மறக்காது
 
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்: ’ஹெலிகாப்டர் விபத்தில் பாதுகாப்பு படை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி மற்றும் ஆயுதப் படை வீரர்களின் திடீர் மரணம் ஆழ்ந்த வேதனை அளிக்கிறது என்றும் நமது ராணுவத்திற்கும் நாட்டிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்