மோடி, அமித்ஷா, ராகுல் காந்திக்கு கொரோனா பரிசோதனை: சுகாதாரத்துறையின் பட்டியல்!

செவ்வாய், 7 டிசம்பர் 2021 (16:51 IST)
பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்,தி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்பட பல பிரபலங்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததாக பீகார் மாநில சுகாதாரத்துறை சார்பில் பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
அதன் பிறகு இது குறித்து விசாரித்தபோது இது போலி பட்டியல் என்று தெரியவந்து உள்ளது. இதனை அடுத்து சுகாதார துறைக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன 
 
பீகார் மாநிலத்தில் பிரதமர் மோடி, அமித்ஷா, ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா சோப்ரா, அக்ஷய் குமார் உள்ளிட்ட பலரும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டதாக போலி பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
 
இது குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது என்றும் போலி பட்டியலில் தயாரித்து வெளியிட்டவரை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்