நாடாளுமன்றத்தில் அதிக இருக்கைகள் ஏன்? தொகுதிகள் அதிகரிப்பா? – பிரதமர் மோடி விளக்கம்!

Webdunia
ஞாயிறு, 28 மே 2023 (15:50 IST)
புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்றத்தில் அதிகமான இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார்.

டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடம் இன்று பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. இன்று காலை ஆதீனங்கள் முன்னிலையில் செங்கோலை சபாநாயகர் இருக்கை அருகே அமைத்தார் பிரதமர் மோடி. இந்த கட்டிடத்திற்குள் ராஜ்ய சபா, லோக் சபா கூடங்கள் தனியாக அமைக்கப்பட்டுள்ளன.

இதில் ராஜ்ய சபாவில் 250 எம்.பிக்களுக்கு 384 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல லோக்சபாவிலும் 543 எம்.பிக்களுக்கு 888 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. கூடுதல் இருக்கைகள் எதிர்காலத்தில் தொகுதிகள் விரிவுப்படுத்தப்பட்டால் பயன்படுத்த வசதியாக அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில் இதை உறுதி படுத்தும் விதமாக பேசிய பிரதமர் மோடி “புதிய நாடாளுமன்றம் என்பது காலத்தின் கட்டாயம். எதிர்காலத்தில் எம்.பிக்களின் எண்ணிக்கை அதிகரிக்க உள்ளது. அதற்கு ஏற்றார்போல கூடுதல் இருக்கைகளுடன் புதிய நாடாளுமன்றம் அமைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

தற்போது இந்தியாவில் மக்கள் தொகை அதிகரித்துள்ள நிலையிலும், பல நகராட்சிகள், மாநகராட்சிகள் விரிவுப்படுத்தப்படும் வரும் நிலையிலும் சில தொகுதிகள் இரண்டாக பிரிக்கப்பட்டு புதிய தொகுதிகள் உருவாக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்