புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு: ரூ.75 நாணயம் வெளியீடு! – மத்திய அரசு அறிவிப்பு!

வெள்ளி, 26 மே 2023 (08:45 IST)
டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட உள்ள நிலையில் அதை சிறப்பிக்கும் விதமாக ரூ.75 நாணயம் வெளியிடப்படுவதாக மத்திய நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் அதிநவீன வசதிகளுடன் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ள நிலையில் வரும் மே 28ம் தேதியன்று பிரதமர் மோடி இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க உள்ளார்.

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பை சிறப்பிக்கும் விதமாக ரூ.75 நாணயத்தை வெளியிடுவதாக மத்திய நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நாணயத்தின் ஒரு புறம் அசோக சின்னமும், அதன் கீழ் 75 என்ற எண்ணும் இடம்பெறும். இடதுபுறத்தில் பாரத் என்ற வார்த்தை தேவநாகரியிலும், வலதுபுறம் இந்தியா என்ற வார்த்தை ஆங்கிலத்திலும் இடம்பெறும்.

மற்றொரு பக்கம் புதிய நாடாளுமன்றத்தி படம் அச்சிடப்பட்டிருக்கும். குறைந்த அளவிலேயே இந்த நாணயங்கள் அச்சிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்