காலாவதியான உணவு பொருட்களை வெள்ள நிவாரணமாக வழங்கிய பதஞ்சலி

Webdunia
வியாழன், 14 செப்டம்பர் 2017 (18:13 IST)
இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான பதஞ்சலி நிறுவனம் அசாம் மாநிலத்தில் சிக்கிய மக்களுக்கு காலாவதியான உணவு பொருட்களை நிவாரணமாக வழங்கி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
நாடு முழுவதும் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. குறிப்பாக வடமாநிலங்களில் கடுமையான மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில் அசாம், பீகார் உள்ளிட்ட மாவட்டஙகள் வெள்ளத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
 
இந்நிலையில் பதஞ்சலி நிறுவனம் வெள்ள நிவாரணம் வழங்கியதன் மூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான பதஞ்சலி நிறுவனம் அசாம் மாநில மக்களுக்கு வெள்ள நிவாரணமாக காலவதியான உணவு பொருட்களை வழங்கியுள்ளது. மேலும் அந்த உணவு பொருட்களை மக்கள் அதிகளவில் திருப்பி கொடுத்துவிட்டனர்.
அடுத்த கட்டுரையில்