தஞ்சையில் நடைபெறும் மாநாட்டில் எதிர்கால அரசியல் கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என வைகோ கூறியுள்ளார்.
பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி மதிமுக சார்பில் தஞ்சையில் வருகிற 16ஆம் தேதி மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை பார்வையிடுவதற்காக சென்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசியதாவது:-
1995-ல் நடைபெற்ற முதல் மதிமுக மாநாடு மிகப்பெரிய மாநாடு. அதை மிஞ்சும் அளவிற்கு தஞ்சை மாநாடு அமையும். இந்த மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் பல நிறைவேற்றப்படும். எதிர்கால அரசியல் கூட்டணி குறித்தும் முக்கிய முடிவு எடுக்கப்படும்.
மதச்சார்பின்மையும், கூட்டாச்சி தத்துவமும் காக்கப் பட வேண்டுமென்றால் காங்கிரஸ், பாஜக அல்லாத கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும். அதற்கு நான் பக்க பலமாக இருப்பேன் என்றார்.