ஓ குழந்தைங்களுக்கு இப்படியெல்லாம் பெயர் சூஸ் பண்ணலாமா? இவ்வளவு நாளா இது நமக்கு தெரியாம போச்சே!

Webdunia
செவ்வாய், 19 ஜூன் 2018 (08:13 IST)
தம்பதி ஒருவர் வாக்குப்பதிவு நடத்தி தங்களது குழந்தைக்கு பெயர் சூட்டிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஸ்டிரா மாநிலம் கோண்டியா மாவட்டம் தியோரியை சேர்ந்தவர் மிதுன்பங். இவரது மனைவி மன்சி. தம்பதியினருக்கு கடந்த ஏப்ரல் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. தங்கள் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என யோசித்து வந்தனர்.
 
பின் தங்களது குழந்தைக்கு பெயர் வைக்க ஒரு வித்தியாசமான யோசனையை செய்தனர். அது என்னவென்றால் வாக்குப்பதிவு மூலம் குழந்தையின் பெயரை தேர்ந்தெடுப்பது.
அதன்படி யாக்‌ஷ், யுவன், யுவிக் என 3 பெயர்களை தேர்வு செய்து, அதில் எந்த பெயரை வைக்கலாம் என உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இடையே வாக்குப்பதிவு நடத்தினர். இந்த வாக்குப்பதிவில் 192 பேர் கலந்துகொண்டனர். இதில் யுவன் என்ற பெயருக்கு 92 பேர் ஓட்டு போட்டதால் குழந்தைக்கு யுவன் என பெயர் வைக்கப்பட்டது.  பெற்றோரின் இந்த விநோத செயல் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்