ஜப்பானில் உள்ள கியோடா, ஒசாகா பகுதிகளில் இன்று காலை 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் பதறி அடித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
இந்த நிலநடுக்கத்தால் பள்ளியின் சுவர் இடிந்து விழுந்து மாணவி ஒருவர், வீட்டின் சுவர் இடிந்து விழுந்து முதியவர் ஒருவர் மற்றும் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர்.
நிலநடுகத்தின் காரணமாக அங்கு விமான சேவைகள், ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், அங்குள்ள பல பகுதிகளில் மின்சார, துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.