ஆனால் அந்த ஒன்றரை வயது குழந்தை மட்டும் நாய்களிடம் சிக்கி கொண்டது. குழந்தையை அந்த நாய்கள் கடித்துக் குதறியது. அங்கிருந்தவர்கள் நாயிடமிருந்து குழந்தையை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்தனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.