பெஹல்காம் தாக்குதலை அடுத்து, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்த நிலையில், பாகிஸ்தான் அமைச்சர் ஹனிப் அப்பாஸி என்பவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
எங்களுக்கு தண்ணீர் வழங்குவதை நிறுத்தினால், இந்தியா போருக்கு தயாராக வேண்டும் என்றும், எங்களிடம் உள்ள இராணுவ உபகரணங்கள், ஏவுகணைகள் போன்றவை காட்சிக்கு வைக்கப்படவில்லை என்றும், பாகிஸ்தானுக்கு நீரை நிறுத்தினால் இந்தியா மீது ஏவுவதற்காக 130 அணுகுண்டுகளை வைத்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.