இந்தியாவிலேயே செத்தாலும் பரவாயில்லை.. வெளியேற மறுக்கும் 79 வயது பாகிஸ்தான் முதியவர்..!

Siva

ஞாயிறு, 27 ஏப்ரல் 2025 (12:33 IST)
நான் இந்தியாவில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறேன், இங்கேயே நான் செத்தால் கூட பரவாயில்லை, நாட்டை விட்டு வெளியேற மாட்டேன்’ என்று 79 வயது பாகிஸ்தான் முதியவர் ஒருவர் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
பெஹல்காம்  தாக்குதலை அடுத்து, இந்தியாவில் தங்கி இருக்கும் அனைத்து பாகிஸ்தானியர்களும் இன்றுக்குள் வெளியேற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில்,  கடந்த 1972ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தவர் ஹம்சா, பாகிஸ்தானில் இருந்து கேரளாவுக்கு வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
அங்கேயே சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறார் என்பதும், இந்திய குடியுரிமைக்கு அவர் விண்ணப்பித்த போதும் அவருக்கு குடியுரிமை கிடைக்கவில்லை என்பதால் நீண்ட கால விசா அடிப்படையில் அவர் உள்ளார் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், விசா காலாவாதி ஆன நிலையில், கேரள நீதிமன்றத்தின் உத்தரவுபடி அவர் வசித்து வருகிறார். இந்நிலையில், தற்போது மத்திய அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக அவர் வெளியேற வேண்டிய கட்டாய நிலைக்கு வந்துள்ளார்.
 
’எந்த நிலையிலும் என்னுடைய நாடு இதுதான், நான் இங்கே தான் என் இறுதி மூச்சை விட விரும்புகிறேன், என்னை தயவு செய்து வெளியேற சொல்ல வேண்டாம்’ என்று அவர் கேட்டுக் கொண்டார்.
 
இருப்பினும், அவர் வெளியேற வேண்டும் என காவல்துறையினர் உத்தரவு பிறப்பித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்