வாக்குகளுக்காக மோடி நடனமாடவும் தயங்க மாட்டார்: ராகுல் காந்தி விமர்சனம்!

Mahendran

புதன், 29 அக்டோபர் 2025 (15:07 IST)
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, வாக்குகளை ஈர்ப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி எந்த நாடகத்தையும் செய்யத் தயங்க மாட்டார் என்று கடுமையாக விமர்சித்துள்ளார். 
 
பிகார் மாநிலம் முசாபர்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது: 
 
"வாக்குகளைப் பெற முடியும் என்றால், மோடி மேடையில் நடனமாடவும் தயாராக இருப்பார். அவரது நாடகங்களால் திசை திரும்ப வேண்டாம். நாட்டில் ஏழைகளுக்கானது ஒன்று, ஒருசில பெரும் பணக்காரர்களுக்கானது மற்றொன்று என இரண்டு இந்தியாக்கள் உருவாகி வருகின்றன. இதுவே பிகார் வறுமையில் வாட காரணம்.
 
மகாராஷ்டிரம், ஹரியாணாவில் நடந்ததாக கூறப்படும் 'வாக்குத் திருட்டு' முயற்சிகளையும் அவர் சுட்டிக்காட்டினார். இந்தியா கூட்டணி அதிகாரத்துக்கு வந்தால், அனைத்து சமூகத்தினரின் நலன்களும் பாதுகாக்கப்படும் என்றும், அரசியலமைப்பை பாதுகாக்க உறுதி பூண்டுள்ளதாகவும் ராகுல் காந்தி தெரிவித்தார்.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்