2011 முதல் 2021 வரையிலான அ.தி.மு.க. ஆட்சியில் நிரப்பப்படாத 2,569 காலி பணியிடங்களை நிரப்ப, அண்ணா பல்கலைக்கழகம் மூலம் வெளிப்படையான முறையில் தேர்வுகள் நடத்தப்பட்டன.
	 
	2 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதியதில், முறைகேடு குறித்து ஒரு ஆட்சேபணை கூட பெறப்படவில்லை என அமைச்சர் கே.என். நேரு சுட்டிக்காட்டினார். அண்ணா பல்கலைக்கழகம் ஒரு சுயாட்சி நிறுவனம் என்றும், முந்தைய ஆட்சிகளிலும் இதே பல்கலைக்கழகமே தேர்வுகளை நடத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
	 
	அரசியல் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் இந்த அவதூறு முயற்சிகளை வன்மையாக கண்டிப்பதாகவும், இதை முறியடிக்க தேவையான அனைத்து சட்டபூர்வ நடவடிக்கைகளையும் நகராட்சி நிர்வாகத் துறை மேற்கொள்ளும் என்றும் அமைச்சர் கே.என். நேரு உறுதியளித்தார்