தற்போதைய தாக்குதலை தொடங்க ஹமாஸ் தான் முதலில் தாக்குதல் நடத்தியது என்று இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த நடவடிக்கையை, "ஹமாஸை எதிர்த்த சக்திவாய்ந்த பதிலடித் தாக்குதல்" என்று வர்ணித்துள்ளார்.
	 
	இந்த நிலையில் ஜப்பானில் இருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் இந்தக் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு அவர், "எனக்குத் தெரிந்தவரையில், இஸ்ரேல் ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். அதற்கு பதிலடியாக இஸ்ரேல் தாக்கியுள்ளது. தங்கள் மீதான தாக்குதலை எதிர்க்க இஸ்ரேலுக்கு உரிமை உண்டு என்று நான் கருதுகிறேன்" என்று மிகவும் சாதாரணமாக பதிலளித்துள்ளார்.
	 
	பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தற்போது நடத்திவரும் இந்த தொடர் தாக்குதல், முன்னர் செய்யப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாக உள்ளது. இந்த தாக்குதல்கள் மீண்டும் ஒரு முழு அளவிலான போராக மாறுவதற்கான அபாயகரமான சூழல் நிலவுகிறது.