பள்ளி மாணவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் குறித்த பாடம்.. எந்தெந்த வகுப்புகளுக்கு?

Siva

ஞாயிறு, 27 ஜூலை 2025 (11:46 IST)
பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் முக்கிய நடவடிக்கையான 'ஆபரேஷன் சிந்தூர்' உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்திய ராணுவத்தின் இந்த வெற்றிகரமான நடவடிக்கையை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் புதிய பாடத்திட்டத்தை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்  உருவாக்கி வருகிறது.  
 
இந்த புதிய பாடத்திட்டம் மாணவர்களுக்குப் பல்வேறு முக்கிய அம்சங்களை எடுத்துரைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எதிராக நமது நாடு எவ்வாறு எதிர்வினை ஆற்றுகிறது என்பதை மாணவர்களுக்கு புரியவைப்பது மற்றும் தேசிய பாதுகாப்பில் ராணுவம், ராஜதந்திரம் மற்றும் பல்வேறு அமைச்சகங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு எப்படி செயல்படுகிறது என்பதை மாணவர்களுக்கு உணர்த்துவது முக்கிய குறிக்கோள் ஆகும்.
 
ஆபரேஷன் சிந்தூர்' குறித்த பாடத்திட்டம் இரண்டு பகுதிகளாக உருவாக்கப்பட்டுள்ளதாக முதல் பகுதி மூன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கானது என்றும் இரண்டாம் பகுதி ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கானது என்றும் கூறப்படுகிறது.
 
இந்த முயற்சியின் மூலம், இளம் தலைமுறையினரிடையே தேசப்பற்று, பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் நாட்டின் பாதுகாப்பு அமைப்புகள் குறித்த புரிதலை மேம்படுத்த NCERT திட்டமிட்டுள்ளது.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்