பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் ஒரு லட்சம் ரூபாய் அபராதம்: அதிரடி அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 1 ஜூலை 2022 (21:44 IST)
ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு இன்று முதல் நாடு முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது அறிந்ததே 
 
இந்த நிலையில் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தடையை மீறி பயன்படுத்தினால் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என டெல்லி அமைச்சர் கோபால் ராய் எச்சரிக்கை விடுத்துள்ளார் 
 
ஜூலை 10ஆம் தேதி வரை கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்படும் என்றும் அதனை மீறி பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் 5 ஆண்டு சிறை அல்லது ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார் 
 
இந்த அதிரடி அறிவிப்பு அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்