பாஜக இல்லாத தென்மாநிலங்கள்: வட மாநிலங்களின் நிலைமையும் மாறுமா?

Webdunia
சனி, 13 மே 2023 (12:42 IST)
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் நிலையில் தென் மாநிலங்கள் முழுவதுமே பாஜக இல்லாத மாநிலங்களாக மாறி உள்ளது. இதேபோல் வடமாநிலங்களிலும் மாறுமா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். 
 
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான ஆட்சியும், கேரளாவில் கம்யூனிஸ்ட் ஆட்சியும், தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்டிர சமதி ஆட்சியும், ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியும் நடைபெற்று வருகிறது. 
 
இந்த நிலையில் தென் மாநிலங்களில் கர்நாடகாவில் மட்டுமே பாஜக ஆட்சி செய்து வந்த நிலையில் தற்போது கர்நாடகாவிலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. இதனை அடுத்து பாஜக இல்லாத தென் மாநிலங்களாக மாறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அதேபோல் வட மாநிலங்களை பொறுத்தவரை ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியும் மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியும் பீகாரியில் நிதீஷ் குமார் கட்சியின் ஆட்சியும் உள்ளது. தென் மாநிலங்களை போல் வட மாநிலங்களிலும் பாஜகவை வீட்டுக்கு பொதுமக்கள் அனுப்புவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்