தெலுங்கு தேசம் மற்று காங்கிரஸ் கட்சி இன்று கொண்டு வரும் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடையும் என்று தெரிந்தும் துணிந்து கொண்டு வருவது பாஜகவுக்கு நன்மையே அளிக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற வேண்டுமானால் எதிர்க்கட்சிகளுக்கு 266 எம்பிக்கள் ஆதரவு தேவை. ஆனால் 37 எம்பிக்களை கொண்ட அதிமுக 20 எம்பிக்களை கொண்ட பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்ய திட்டமிட்டுள்ளதால் பாஜகவுக்கு நம்பிக்கையில்லா தீர்மானத்தை முறியடிக்க 250 எம்பிக்களுக்கும் குறைவானவர்கள் இருந்தால் போதும். ஆனால் பாஜகவுக்கு மட்டுமே 273 எம்பிக்கள் இருப்பதால் மிக எளிதில் இந்த தீர்மானம் முறியடிக்கப்படும்
இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தால் பாரதிய ஜனதா கட்சிக்கு மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கு இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க பயன்படும் என்ற அடிப்ப்டை கூட தெரியாமல் சொந்தக்காசில் சூனியம் வைத்து கொள்வது போல் எதிர்க்கட்சிகள் இந்த வாக்கெடுப்பை கொண்டு வந்துள்ளது. . மேலும் பாரதிய ஜனதா கட்சியினர் மூன்றுமணிநேரம் பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி வழங்கியுள்ளார். பாஜகவுக்கு கூடுதல் வாய்ப்பு