பாராளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு சபாநாயகர் அனுமதி கொடுத்துள்ளதால் இன்றும் நாளையும் விவாதமும், நாளை மாலை வாக்கெடுப்பும் நடைபெறவுள்ளது. இந்த வாக்கெடுப்பில் பாஜக வெற்றி பெற அதீத முயற்சிகள் எடுத்து வருகிறது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தினர். முதல்வர் கையில் இருக்கும் துறையில் சம்பந்தப்பட்டவர்கள் மீதே ரெய்டு நடத்தியுள்ளதால் அதிருப்தியில் இருக்கும் அதிமுக, நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் மத்திய அரசுக்கு எதிராக வாக்களித்தால் பெரும் பரபரப்பு ஏற்படும். ,மக்களவையில் அதிமுகவுக்கு 37 எம்பிக்கள் இருப்பதால் நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் அதிமுக எம்பிக்களின் வாக்குகள் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.