பாஜக கையிலெடுத்திருக்கும் வியூகம் - ப்ளான் 350: நம்பிக்கையில்லா தீர்மானம் பின்னணி என்ன?

வியாழன், 19 ஜூலை 2018 (21:10 IST)
மத்தியில் தனிப்பெரும் கட்சியாக 4 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு நாளை நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நாளை நாடாளுமன்றத்தில் எதிர்கொள்கிறது.
 
இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்கப்பட்டதற்கான முக்கிய காரணம் ஒன்று கூறப்படுகிறது. அதாவது, பாஜக சில முக்கியமான மசோதாக்களை, தாக்கல் செய்ய இருக்கிறதாம் எனவே, இதற்கு எதிர்ப்புகள் வரக்கூடாது என்பதற்காக இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்கப்பட்டுள்ளதாம்.
 
ஆனால், இதனை எதிர்கொள்ள ப்ளான் 350யை தயாராக வைத்துள்ளதாம் மோடி அரசு. நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு முன்பு பிரதமர் மோடி உருக்கமான உரை ஒன்றை பேச திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
 
மேலும், அதிமுகவிடம் ஆதரவு கோரியுள்ளதாம் பாஜக. எனவே, 313 ஆக இருக்கும் பாஜகவின் பலம் 350 ஆக உயரும். மேலும், இது பாஜக மீண்டும் தாங்கள் பெரிய கட்சி என்று நிரூபிக்க இந்த வாக்கெடுப்பு உதவும் என கூறப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்