ஹலால் உணவுக்கு தடை.. அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொன்ன விளக்கம்..!

Webdunia
புதன், 22 நவம்பர் 2023 (09:29 IST)
சமீபத்தில் ஹலால் உணவுக்கு தடை என்ற அறிவிப்பு உத்தரப்பிரதேச மாநிலத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் இது குறித்த கேள்வி ஒன்றுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளார்.

ஹலால் சான்றிதழுடன் உணவுப் பொருட்களின் உற்பத்தி விநியோகம் மற்றும் விற்பனைக்கு உத்தரப் பிரதேசம் மாநில அரசு சமீபத்தில் தடை விதித்தது

இந்த விவகாரம் குறித்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய போது மக்கள் உண்பதற்கான தரமான உணவு எது என்று சான்றளிக்கும் அதிகாரம் அரசிடம் மட்டுமே உள்ளது என்றும் அரசு சாரா நிறுவனங்கள் அதை செய்வது சரியல்ல என்றும் தெரிவித்தார்.

உணவின் தரத்தை சோதனை செய்வது அரசின் வேலை என்றும் எங்களிடம் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.  

ஹைதராபாத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பதிலை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்