அல்சர் வயிற்றுப்புண்ணை குணமாக்கும் 5 இயற்கை நிவாரணிகள்!
திங்கள், 20 நவம்பர் 2023 (08:43 IST)
இன்றைய காலக்கட்டத்தில் சரியான நேரத்தில் உணவு சாப்பிடாமல் இருப்பது, சரியான அளவு உணவு எடுத்துக் கொள்ளாமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அல்சர் எனப்படும் வயிற்றுப்புண் பலருக்கும் ஏற்படுவது அதிகரித்துள்ளது.
ஆரம்பத்திலேயே அல்சர் பிரச்சினைகளுக்கு சரியான சிகிச்சை எடுக்காவிட்டால் அது மேலும் உபத்திரத்தை உங்கள் உடலுக்கு ஏற்படுத்தக் கூடியது. அல்சர் பிரச்சினையை ஆரம்பத்திலேயே குணமாக்க இயற்கையான 5 நிவாரணிகள் உள்ளன. இவற்றை அவ்வபோது உணவில் சேர்த்துக் கொள்வது வயிற்றுப்புண்ணை குணப்படுத்தும்.
மணத்தக்காளி கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் வயிற்றுப்புண் விரைவில் குணமாகும்.
பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குடலில் பழுதுபட்ட மெல்லிய சவ்வு தோல்களை விரைவில் வளர செய்து வயிற்றுபுண்ணை ஆற்றும்.
பாகற்காயை விட பாகற்பழம் சிறந்தது. இதை சமைத்து உண்டு வர வயிற்றில் உள்ள கிருமிகளை அழிப்பதுடன் குடலையும் பலப்படுத்தும்.
வாகை மரத்தின் பிசினை பொடி செய்து பால் அல்லது வெண்ணெய்யில் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் ஆறும்.
தண்டு கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்பு சத்து நிறைந்துள்ளது. இதை சாப்பிட்டு வருவதால் உடல் குளிர்ச்சி பெறும். மூலநோய் மற்றும் குடல்புண்ணிற்கு மிக சிறந்த உணவு இது.