இஸ்லாமிய மார்க்கத்தின் படி ஹலால் என்றால் அனுமதிக்கப்பட்ட உணவு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் "ஹலால் இண்டியா பிரைவேட் லிமிடெட் - சென்னை, ஜமாத் உலமா ஹிண்ட் அறக்கட்டளை - டெல்லி, ஹலால் கவுன்சில் ஆப் இண்டியா- மும்பை, ஜமாத் உலமா - மும்பை ஆகிய அமைப்புகள் சில பொருட்களுக்கு சட்டவிரோதமான ஹலால் சான்றிதழ் அளித்து வருகின்றன. இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு தொடுக்கப்பட்டது.