புதிய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியை அறிவித்தார் ஜனாதிபதி

Webdunia
வியாழன், 13 செப்டம்பர் 2018 (19:57 IST)
தற்போது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக இருப்பவர் தீபக் மிஸ்ரா. இவருடைய பதவிக்காலம் வரும் அக்டோபர் 2ஆம் தேதி முடிவடைகிறது. இந்த நிலையில் புதிய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியை விரைவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் சற்றுமுன் புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் என்பவரை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் நியமனம் செய்துள்ளார். ரஞ்சன் கோகாய் வரும் அக்டோபர் 3ஆம் தேதி சுப்ரீம், கோர்ட் தலைமை நீதிபதியாக பதவியேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள ரஞ்சன் கோகாய் என்பவர் அசாம் மாநில முன்னாள் முதலமைச்சரின் மகன் என்பதும் முதல்வரின் மகனாக இருந்தபோதிலும் இவருக்கு பரம்பரை சொத்தாக கிடைத்த பழைய வீட்டைத் தவிர வேறு சொத்து இல்லை என்பதும், இவரது தீர்ப்புகள் சிறப்பானவை என்பதால் இனி நீதித்துறையில் நேர்மை கோலோச்சும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்