7 பேர் விடுதலை : தமிழக அரசுக்கு அதிகாரம் : உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

வியாழன், 6 செப்டம்பர் 2018 (12:14 IST)
மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் பேரறிவாளன் உட்பட 7 பேர்களை விடுதலை செய்யும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

 
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தண்டிக்கப்பட்டு ஆயுள் தண்டனைக் கைதியாக நளினி, பேரறிவாளன், முருகன் உள்ளிட்ட ஏழு பேர் கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். சமீபத்தில் பேரறிவாளன் பரோலில் வெளியே வந்து பின் சிறைக்கு சென்றார்.
 
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என தமிழகத்தில் கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
 
அப்போது, 7 பேரின் விடுதலை குறித்து முடிவெடுக்க ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரைக்கலாம் என நீதிபதி கோகாய் என தீர்ப்பளித்தார். எனவே, தமிழக அரசு சட்டசபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
மீண்டும் பரிசீலியுங்கள் எனக்கூறலாமே தவிர தமிழக அரசின் கோரிக்கையை ஆளுநர் நிராகரிக்க முடியாது. எனவே, தமிழக அரசு 7 பேரையும் விடுதலை முயற்சியில் இறங்க வேண்டும் என பேரறிவாளன் வழக்கறிஞர் பேட்டியளித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்