இதனை எதிர்த்து அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 2013 ஆம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டால் 377–வது சட்டப்பிரிவின் கீழ் சிறைத்தண்டனையும், அதிக பட்சமாக ஆயுள் தண்டனையும் விதிக்கப்படும் என தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா தலைமையிலான அமர்வு இயற்கைக்கு முரணான பாலியல் உறவு தண்டனைக்குரிய குற்றமல்ல என்றும் ஓரினச்சேர்க்கைக்கு எதிரான சட்டப் பிரிவு 377 ரத்து செய்யப்படுகிறது எனவும் அதிரடியாக தீர்ப்பளித்தார். இது தன்பாலின உறவினர்களிடையே மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.