நாடு முழுவதும் தொடங்கியது நீட் தேர்வு: கடுமையான கட்டுப்பாடுகள்!

Webdunia
ஞாயிறு, 13 செப்டம்பர் 2020 (14:19 IST)
நாடு முழுவதும் தொடங்கியது நீட் தேர்வு
இன்று மதியம் சரியாக 2 மணிக்கு நாடு முழுவதும் நீட் தேர்வு தொடங்கியது. இந்த தேர்வை எழுதும் மாணவர், மாணவிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது
 
தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களின் பலத்த எதிர்ப்பையும் மீறி நாடு முழுவதும் 16 லட்சம் மாணவர்கள் இன்று நீட் தேர்வு எழுதுகின்றனர். கடும் சோதனைகளுக்கு பின்னர் நீட் மையங்களுக்குள் மாணவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
தமிழகத்தின் 14 நகரங்களில் நடைபெறும் தேர்வில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கின்றனர்.  தமிழகத்தில் மொத்தம் 238 தேர்வு மையங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தமிழகத்தில் நீட் தேர்வு எழுதும் மையங்களில் வழிகாட்டு நெறிமுறைகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே வைக்கப்பட்டிருப்பதாகவும், தமிழில் இல்லை என்றும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. மேலும் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் 11 மணிக்கே சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர் என்றும், அவர்கள் மதிய உணவு சாப்பிடுவதற்கு கூட அனுமதிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டையும் மாணவர்கள் வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்