ஷாருக்கானிடம் 8 கோடி கேட்ட சமீர்... விசாரணை வலையில்...!

Webdunia
திங்கள், 25 அக்டோபர் 2021 (15:02 IST)
மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்குனர் சமீர் வான்கடே மீதான லஞ்சம் புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

 
பிரபல நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் நிலையில் அவரை ஜாமீனில் விட விடாமல் போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.  
 
இந்நிலையில் இந்த வழக்கில் இருந்து ஆர்யன் கானை விடுவிப்பதற்கு போதைப்பொருள் அதிகாரிகள் ரூ.25 கோடி பேரம் பேசியதாக பரபரப்பு தகவல் வெளியாகியது. மேலும் சமீர் வான்கடே ரூ.8 கோடி லஞ்சம் கேட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. 
 
இதனிடையே மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்குனர் சமீர் வான்கடே மீதான லஞ்சம் புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்