இன்று 62,156 புள்ளிகளில் வணிகம்!

செவ்வாய், 19 அக்டோபர் 2021 (10:55 IST)
கடந்த சில நாட்களாகவே மும்பை பங்கு சந்தை ஏற்றத்துடன் இருந்துவரும் நிலையில் நேற்று மும்பை பங்குச் சந்தை வரலாறு காணாத ஏற்றம் அடைந்தது. 

 
ஆம் நேற்று மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் 513 புள்ளிகள் உயர்ந்து 61,819 புள்ளிகளில் வணிகம் தொடங்கியது. இதேபோல தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 144 புள்ளிகள் உயர்ந்து 18,482 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது.
 
இந்நிலையில் இன்று மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் 390 புள்ளிகள் உயர்ந்து 62,156 புள்ளிகளில் வணிகம் தொடங்கியுள்ளது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 127 புள்ளிகள் உயர்ந்து 18,604 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்