சுட்டுக்கொள்ளப்பட்ட அப்பாவிகள்: பதற்றத்தை குறைக்க ஊரடங்கு!

Webdunia
திங்கள், 6 டிசம்பர் 2021 (10:17 IST)
நாகாலாந்தில் அப்பாவி தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து மோன் மாவட்டத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

 
நாகலாந்து மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளாக பயங்கரவாதிகள் குண்டுவெடிப்பு சம்பவங்களை நிகழ்த்தி வருகின்றனர் என்பதும் இதனையடுத்து அங்கு பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் நாகலாந்து மாநிலத்தில் உள்ள மோன் என்ற நகரில் ஒரு சிலர் சந்தேகத்திற்கிடமாக இருந்த நிலையில் அவர்கள் பயங்கரவாதிகள் என நினைத்து பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர். 
 
ஆனால் துப்பாக்கி சூடு முடிந்த பிறகு பார்த்தபோது அவர்கள் அனைவரும் அப்பாவி பொதுமக்கள் என தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பாதுகாப்பு படையினர் மீது நடத்திய தாக்குதலில் ஒரு வீரர் கொல்லப்பட்டதாகவும், ராணுவ வாகனங்கள் தீ வைக்கப்பட்டதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. 
 
அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் பதற்றத்தை கட்டுப்படுத்த மோன் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தொழிலாளர்கள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட பகுதியை முதலமைச்சர் இன்று பார்வையிடுகிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்