”உன் இஷ்டத்துக்கெலாம் பிளவுஸ் தைக்க முடியாது”; கணவன் மறுத்ததால் மனைவி தற்கொலை!

திங்கள், 6 டிசம்பர் 2021 (08:55 IST)
ஆந்திராவில் பிளவுஸ் தைத்து தருவதில் கணவன் – மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஆம்பர்பேட் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீநிவாஸ். இவருக்கு விஜயலெட்சுமி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவர் அப்பகுதியில் வீடு வீடாக சென்று புடவை, பிளவுஸ் போன்றவைகளை விற்பதோடு, அதை தைத்து கொடுத்தும் வருகிறார்.

இந்நிலையில் கணவரிடம் தனக்கு ஒரு பிளவுஸ் தைத்து தருமாறு விஜயலட்சுமி கேட்டுள்ளார். ஆனால் கணவர் தைத்துக் கொடுத்த டிசைன் விஜயலட்சுமிக்கு பிடிக்கவில்லை என்றும் அதனால் தனக்கு பிடித்தது போல் தைத்து தருமாறும் கேட்டதால் இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதை தொடர்ந்து ஸ்ரீநிவாஸ் வெளியே கடைக்கு சென்றிருந்த சமயம் வீட்டில் விஜயலட்சுமி தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்