மாடுகளை விட பெண்கள் மீது அதிக கவனம் செலுத்துங்கள் – மோடிக்கு நாகாலாந்து அழகி அறிவுரை !

Webdunia
வியாழன், 17 அக்டோபர் 2019 (07:51 IST)
மிஸ் நாகாலாந்து போட்டியில் கலந்துகொண்ட பெண் ஒருவர் பிரதமர் மோடிக்கு அறிவுரைக் கூறும் விதமாக ஒருக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 5 ஆம் தேதி நாகாலாந்தின் தலைநகரான ஹோமியோவில் மிஸ் ஹோமியோ அழகிப் போட்டி நடைபெற்றது. அதில் பல பெண்கள்  கலந்துகொண்டனர். இதில் விக்கானுவோ சச்சு என்ற 18 வயது பெண்ணும் கலந்துகொண்டார்.

அப்போது கேள்வி பதில் சுற்றின் போது நடுவர்கள் அவரிடம் ‘ பிரதமர் மோடியுடன் பேசுவதற்கு அழைக்கப்பட்டால் அவரிடம் நீங்கள் என்ன சொல்வீர்கள்’ என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் ’மாடுகளை விட பெண்கள்மீது அதிக கவனம் செலுத்துங்கள்’ எனத் தெரிவித்தார். இந்தப் பதிலைக் கேட்ட நடுவர்கள் மற்றும் பார்வையாளர்கள் பலமாக சிரித்தனர்.
அந்த பெண் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்