”சீன அதிபர் ”டங்கல்” படம் பார்த்துள்ளார்”.. மோடி நெகிழ்ச்சி

Arun Prasath

புதன், 16 அக்டோபர் 2019 (09:11 IST)
ஹரியானாவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட மோடி, ”சீன அதிபர் தான் “டங்கல்” படம் பார்த்ததாக என்னிடம் கூறினார்” என பேசியுள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு அமீர் கான் நடிப்பில் வெளீவந்த ”டங்கல்” இந்தியாவில் பல மாநிலங்களிலும் மொழி பெயர்த்து வெளியிடப்பட்டது. இத்திரைப்படம் இந்தியா மட்டுமல்லாது உலகளவிலும் வரவேற்பை பெற்றது. அரியானா மாநிலத்தை சேர்ந்த மகாவீர்சிங் போகத் என்ற முன்னாள் மல்யுத்த வீரர் மற்றும் அவருடைய மகள் பபிதா போகத் ஆகியோரின் மல்யுத்த வரலாற்றை அடிப்படையாக வைத்தே இத்திரைப்படம் எடுக்கபட்டது.

மல்யுத்த வீராங்கனை பபிதா போகத்தும் அவரது தந்தை மகாவீர்சிங் போகத்தும் சமீபத்தில் பாஜகவில் இணைந்தனர். மேலும் பபிதா போகத், வருகிற அரியானா சட்டமன்ற தேர்தலில் தாத்ரி தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிடுகிறார்.
இந்நிலையில் அந்த தொகுதியில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, ”தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்தேன்.


அப்போது அவர் டங்கல் படம் பார்த்ததாக என்னிடம் கூறினார்” என பேசினார். மேலும், அரியானாவில் உள்ள பெண் குழந்தைகள், திறமைசாலிகள். அவர்கள் பையன்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என கூறினார். டங்கல் திரைப்படம் சீனாவில் 900 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்