ஸ்கேன் இயந்திரத்தின் காந்தபுலத்தால் தூக்கி வீசப்பட்ட நபர் உயிரிழப்பு

Webdunia
திங்கள், 29 ஜனவரி 2018 (13:20 IST)
மும்பை மருத்துவமனை ஒன்றில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க நோயாளியுடன் சென்ற நபர் ஒருவர் ஸ்கேன் இயந்திரத்தின் காந்தபுலத்தால் ஈர்க்கப்பட்டு சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
மும்பையைச் சேர்ந்த ராஜேஷ் மாரு என்பவர் சேல்ஸ்மேனாக பணியாற்றி வருகிறார். இவர் தனது வயதான உறவினர் ஒருவரை தனியார் மருத்துவமனைக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க அழைத்துச் சென்றுள்ளார். ராஜேஷ் அழைத்துச் சென்ற பெண்ணுக்கு சுசாசக் கேளாறு இருந்ததால் ராஜேஷ் ஆக்சிஜன் சிலிண்டர் ஒன்றை உடன் எடுத்துச் சென்றுள்ளார்.
 
எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்கும் அறைக்குள் ராஜேஷ் ஆக்சிஜன் சிலிண்டருடன் சென்றுள்ளார். பணியில் இருந்த மருத்துவர் மற்றும் ஸ்கேன் அறைக்கு வெளியே இருந்த ஊழியரும் ஆக்சிஜன் சிலிண்டருடன் உள்ளே செல்ல அனுமதித்ததாக கூறப்படுகிறது. 
 
ஸ்கேன் அரைக்குள் சென்ற ராஜேஷ் இயந்திரத்தின் சக்தி வாய்ந்த காந்தபுலத்தால் ஈர்க்கப்பட்டு இயந்திரத்தில் வேகமாக மோதியதில் உயிரிழந்தார். ராஜேஷ் உயிரிழப்புக்கு மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
 
இதையடுத்து ராஜேஷ் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் மருத்துவர், மருத்துவமனை ஊழியர் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்