பாபர் மசூதி இடிப்பு சம்பவம்.. 32 ஆண்டுகளுக்கு பின் ஒருவர் கைது..!

Webdunia
வியாழன், 4 ஜனவரி 2024 (07:51 IST)
32 ஆண்டுகளுக்கு முன் பாபர் மசூதி இடிப்பு சம்பவம் நடந்தபோது வன்முறையில் ஈடுபட்டதாக தற்போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது நாடு முழுவதும் சில வன்முறை நிகழ்வுகள் நடந்தன. இந்த நிலையில் பாபர் மசூதி இடுப்பு தினத்தில் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டதாக ஸ்ரீகாந்த் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்

தற்போது 56 வயது ஆகும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர் பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தில் பங்கேற்றத்துடன் கர்நாடகாவில் நடந்த கலவரத்திலும் பங்கேற்றதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்

ALSO READ: செந்தில் பாலாஜி வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை.. 900 பேர்கள் மீது குற்றச்சாட்டு..!

32 ஆண்டுகளாக இவர் தலைமறைவாக இருந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாபர் மசூதி வழக்கு முடிவடைந்து அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் இந்த கைது நட வடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்