அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைவதை அடுத்து இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். அவருக்கு நீதிமன்ற காவல் நீடிக்கப்படுமா என்பது குறித்து தகவல் இன்னும் சில மணி நேரங்களில் தெரியவரும்.
சட்டவிரோத பண பரிவர்த்தனை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். அது முதல் அவர் ஆறு மாதங்களுக்கு மேலாக புழல் சிறையில் உள்ளார்.