எங்கள் ஆதரவு இல்லாமல் பாஜக வெற்றி பெற முடியாது: மம்தா பானர்ஜி

Webdunia
புதன், 16 மார்ச் 2022 (17:06 IST)
எங்கள் ஆதரவு இல்லாமல் பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் வெற்றி பெற முடியாது என்று மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி காலம் விரைவில் முடிவடைய உள்ளதை அடுத்து புதிய குடியரசுத் தலைவர் தேர்வு தேர்தல் விரைவில் வரவுள்ளது 
 
இதற்காக எதிர்க்கட்சிகள் இணைந்து பொது வேட்பாளரை நிறுத்த திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை அடுத்து எங்கள் ஆதரவு இல்லாமல் பாஜக வெற்றி பெற முடியாது என்றும் அதை பாஜக மறந்து விடக்கூடாது என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்