நடிகர் சங்கத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தேதி அறிவிப்பு

சனி, 12 மார்ச் 2022 (16:13 IST)
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல்  கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி நடைப்பெற்றது.

பாண்டவர் அணியில் நடிகர் விஷால், நாசர் மற்றும் கர்த்தி ஆகியோர் போட்டியிட்டனர். மற்றொரு அணியில் சுவாமி சங்கரடஹஸ் அணியில் நடிகர் பாக்யராஜ் தலைமையில் கணேஷ், குட்டி பத்னிமி ஆகியோட் போட்டியிட்டனர்.

நீதிமன்ற உத்தரவின்படி வாக்குகள்  இன்னும் எண்ணப்படாமல்  வங்கி லாக்கரில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் வரும் 20 ஆம் தேதி எண்ணப்படவுள்ளன.

இதுகுறித்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த  3  நீதிபதிகள் கொண்ட அமர்வால் விவாதிக்கப்பட்டது. கடந்த மாதம் 23 ஆம் தேதி ஏற்கனவே நடத்தப்பட்ட தேர்தலின் பதிவான வாக்குகளை எண்ணலலாம் என தீர்ப்பளித்தது. வரும் 20 ஆம் தேதி   வாக்குகள் எண்ணப்பட உள்ளதாக தகவல் வெளியாகும் நிலையில்.  வாக்கு எண்ணிக்கை மையங்களில் வேட்பாளார்கள் மற்றும் முகவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.


 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்