மத்திய அரசு எடுக்கும் முடிவை பின்பற்றுவோம்: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு..

Mahendran
வெள்ளி, 29 நவம்பர் 2024 (10:01 IST)
வங்கதேசத்தில் இந்து மக்கள் தாக்கப்படுவது குறித்த விவகாரத்தில் மத்திய அரசின் முடிவை பின்பற்றுவோம் என மேற்கு வங்க மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படும் சூழல் கவலை அளிக்கும் நிலையில், இது வெளிநாட்டு விவகாரம் என்பதால் மாநில  அரசு கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று கூறிய முதல்வர் மம்தா பானர்ஜி இந்த விவகாரம் மேற்கு வங்க மாநில அரசின் வரம்பிற்குள் வராது என்றும், இந்த விஷயத்தில் மத்திய அரசுதான் நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்றும், மத்திய அரசின் முடிவை மேற்கு வங்க அரசு ஏற்றுக்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், இஸ்கான் அமைப்பின் பிரதிநிதிகள் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்றும், அது தொடர்பான முழுமையான தகவல் விரைவில் வெளிவரும் என்றும் அவர் கூறினார்.

ஆனால் அதே நேரத்தில் வக்பு வாரிய மசோதா முஸ்லிம்களுக்கு எதிரானது என்பதால், இந்த மசோதாவை நாங்கள் எதிர்ப்போம் என்றும், இந்த மசோதா குறித்து மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசிக்கவில்லை என்றும், இது மதச்சார்பின்மைக்கு எதிரானது என்றும் அவர் தெரிவித்தார். முஸ்லிம்களின் உரிமையை பறிக்கும் நோக்கம் கொண்ட இந்த மசோதாவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எதிர்க்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்