மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், பாஜக உடன் கூட்டணி வைத்த உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சி 56 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் 2024 தேர்தலில், காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்த நிலையில், வெறும் 19 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 22 தொகுதிகளில் முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி 11 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
கடந்த 2019 தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைத்த சிவசேனா கட்சி 56 தொகுதிகளில் வென்றிருந்தது. ஆனால், முதல்வர் பதவி தனக்கே வேண்டும் என்று உத்தவ் தாக்கரே அடம்பிடித்ததால் கூட்டணியில் இருந்து விலகியது. அதன் பின்னர், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் முதல்வர் பதவியை ஏற்றார். எனினும், சில ஆண்டுகளில் அந்த ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து, ஷிண்டே தலைமையிலான சிவசேனா தற்போது மகாராஷ்டிராவில் ஆட்சி செய்து வருகிறது.
தற்போதைய தேர்தல் முடிவுகளில், பாஜக கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் 216 இடங்களில் பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளது. இந்தியா கூட்டணி வெறும் 59 தொகுதிகளில் மட்டுமே முன்னணியில் உள்ளது.
கடந்த முறை முதல்வர் பதவிக்காக தவறான கூட்டணிக்கு சென்ற உத்தவ் தாக்கரே, இந்த முறையும் அதே கூட்டணியில் நம்பிக்கை வைத்து தேர்தலில் களமிறங்கியபோதும், படுதோல்வி அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.