கடந்த வாரம் தங்கம் விலை ஒரு சவரன் 55 ஆயிரத்து 480 என்ற விலையில் விற்பனையான நிலையில் இன்று தங்கம் விலை 58,400 என விற்பனை ஆகி வரும் நிலையில் ஒரே வாரத்தில் கிட்டத்தட்ட 3000 ரூபாய் தங்கம் விலை உயர்ந்துள்ளது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் இன்று ஒரே நாளில் ஒரு கிராம் 75 ரூபாயும் ஒரு சவரன் 600 ரூபாயும் உயர்ந்து உள்ள நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 75 ரூபாய் உயர்ந்து ரூபாய் 7,300என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 600 உயர்ந்து ரூபாய் 58,400 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,805 எனவும் ஒரு சவரன் ரூபாய் 62,440 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 101.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 101,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது.