போக்குவரத்து ஊழியர்கள் 97 பேர் சஸ்பெண்ட்.. 40 பேர் டிஸ்மிஸ்: போக்குவரத்துறை நடவடிக்கை

Siva
ஞாயிறு, 21 ஏப்ரல் 2024 (16:26 IST)
கேரள மாநில போக்குவரத்து துறையில் 97 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் 40 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கேரள மாநில போக்குவரத்து துறை ஊழியர்கள் மது போதையுடன் பணியாற்றியதாக பல புகார்கள் வெளிவந்த நிலையில் இன்று அதிரடியாக சோதனை செய்யப்பட்டது. 
 
இதனை அடுத்து பணியில் இருந்த போது மது போதையில் இருந்ததாக 97 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக கேரள மாநில போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. 
 
அதேபோல் 40 தற்காலிக ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும் இந்த நடவடிக்கை இன்னும் தொடரும் என்றும் கேரள மாநில போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. 
 
பணியில் இருக்கும் போது மது போதையில் இருப்பது மன்னிக்க முடியாத குற்றம் என்றும் இது போன்று பணியில் இருக்கும் போது மது போதை இருந்தால் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கேரள மாநில போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்