மது போதையில் அண்ணன் மகனை கத்தியால் குத்தி கொலை..! தப்பி ஓடிய சித்தப்பாவுக்கு போலீசார் வலை வீச்சு..!

Senthil Velan

வியாழன், 22 பிப்ரவரி 2024 (09:56 IST)
உசிலம்பட்டி அருகே மது போதையில் அண்ணன் மகனை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய சித்தப்பாவை போலீசார் தேடி வருகின்றனர். 
 
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எம்.பாறைப்பட்டியைச் சேர்ந்தவர் அய்யர்பாண்டி. விவசாய கூலி தொழிலாளியான இவரும், இவரது சித்தப்பாவான பெரியகருப்பன் என்பவரும் இணைந்து அடிக்கடி மது அருந்துவதை வழக்கமாக கொண்டிருந்தாக கூறப்படுகிறது.,
 
இந்நிலையில் வழக்கம் போல மது அருந்திக் கொண்டிருந்த போது மது போதையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், அய்யர்பாண்டியை அவரது சித்தப்பாவான பெரியகருப்பன் தான் மறைந்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தியதில் தலை, உடல் உள்ளிட்ட 5 இடங்களில் படுகாயம் ஏற்பட்டு மயங்கியவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்த நிலையில் வரும் வழியிலேயே அய்யர்பாண்டி பரிதாபமாக உயிரிழந்தார்.,
 
தகவலறிந்து விரைந்து வந்த  போலிசார் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு இந்த கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
 
அண்ணன் மகனை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு தப்பி ஓடிய பெரியகருப்பனை தேடி வருகின்றனர்.

ALSO READ: டெல்லியை முற்றுகையிட்ட விவசாயிகள் மீது தாக்குதல்..! எல்லையில் நீடிக்கும் பதற்றம்..!!
 
மது போதையில் ஏற்பட்ட தகராறில் அண்ணன் மகனை சித்தப்பா குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.,

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்